பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் குரூப் - 'C' பிரிவில் 60 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மும்பை, தாராபூர், விசாகப்பட்டினம், மற்றும் கொல்கத்தாவில் உள்ள நிறுவனங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. இதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
அப்பர் டிவிசன் கிளார்க் (Upper Division Clerk) (DR01)
ஸ்டெனோகிராபெர் (Stenographer Grade-III) (DR02)
காலிப்பணியிடங்கள்:
அப்பர் டிவிசன் கிளார்க் - 47
ஸ்டெனோகிராபெர் - 13
மொத்தம் = 60 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.02.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 25.02.2019
தேர்வுக்கட்டண விவரம்:
1. அப்பர் டிவிசன் கிளார்க் பணிக்கான கட்டணம் = ரூ.100
2. ஸ்டெனோகிராபெர் பணிக்கான கட்டணம் = ரூ.100
எஸ்.சி / எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் PWBD போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும்.
செலுத்திய தேர்வுக்கட்டணத்தை மீண்டும் திரும்பப் பெற இயலாது.
வயது வரம்பு:
1. UR பிரிவினர் - 18 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.
2. ST / SC பிரிவினர் - 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.
3. OBC பிரிவினர் - 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம்:
அப்பர் டிவிசன் கிளார்க், ஸ்டெனோகிராபெர் என்ற பணிக்கு மாதம் ரூ.25,500 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
1. அப்பர் டிவிசன் கிளார்க் என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் ஏதாவது ஒரு பட்டத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயிற்சியுடன் கூடிய ஒரு நிமிடத்தில் குறைந்தபட்சமாக 30 வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறமை உள்ளவராக இருத்தல் வேண்டும்.
2. ஸ்டெனோகிராபெர் என்ற பணிக்கு, பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து பயிற்சியில் நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகளும், ஒரு நிமிடத்தில் குறைந்தபட்சமாக 30 வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறமை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
https://recruit.barc.gov.in/barcrecruit/main_page.jsp - என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், முழுமையான தகவல்களைப் பெற,
https://recruit.barc.gov.in/barcrecruit/appmanager/UserApps/getDocument?do=download&action=docfile&process=52190B192C1B17E2707E58FA27C592A8&pid=82 - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.