பிஎட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்பு: இன்று முதல் மாணவர் சேர்க்கை

பிஎட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்பு: இன்று முதல் மாணவர் சேர்க்கை
பிஎட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்பு: இன்று முதல் மாணவர் சேர்க்கை
Published on

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிஎட் சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று (அக்டோபர் 1)
முதல் தொடங்குகிறது. இதுபற்றி பல்கலைக்கழகப் பதிவாளர் கே. ரத்னகுமார் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.

2021ம் ஆண்டுக்கான பிஎட் சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணையவழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு அக்டோபர் 1ம் தேதி முதல் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பிஎட் சிறப்புக் கல்வி படிப்பு - பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்பிடிப்பு அல்லது பட்ட மேற்படிப்பைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி: அக்டோபர் 31
தொடர்புக்கு: 044 2430 6617, 98416 85515
விவரங்களுக்கு: www.tnou.ac.in

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com