மத்தியப்பல்கலைக்கழகங்களில் பாடங்களை கற்பிக்க துறை சார்ந்த வல்லுநர்களுக்கு பி.ஹெச்.டி கட்டாயமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் ஜகதீஷ்குமார் தலைமையில் தேசிய கல்விக்கொள்கை குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதில் மத்தியப்பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது, மத்தியப்பல்கலைக்கழகங்களில் துறை சார்ந்த வல்லுநர்களை பேராசிரியர்களாக நியமிக்கவும், இதற்காக சிறப்பு பணியிடங்களை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. பி.ஹெச்.டி கட்டாயம் என்ற விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கும் வகையில் தேசிய அளவில் இணையதளம் ஒன்றை உருவாக்கவும் பல்கலைக்கழக மானியக்குழு முடிவெடுத்துள்ளது.