வங்கியில் பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்!

வங்கியில் பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்!
வங்கியில் பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்!
Published on

இந்தியாவிலுள்ள ரீஜினல் ரூரல் (RRB) வங்கிகளில் ஆபிசர் (Scale I,II & III) மற்றும் அலுவலக உதவியாளர் (Multipurpose) போன்ற பணிகளுக்கான ஐபிபிஎஸ் (IBPS) நடத்தும் பொது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணிகள்:
1. ஆபீசர் (Scale I,II & III): சீனியர் மேனேஜர், மேனேஜர் & அசிஸ்டெண்ட் மேனேஜர் 
2. அலுவலக உதவியாளர் (Multipurpose)

மொத்த காலியிடங்கள் = 8,400

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.07.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 04.07.2019

தேர்வு நடைபெறும் தேதிகள்:
ஆபீசர் பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நடைபெறும் தேதிகள்: 03.08.2019,04.08.2019 & 11.08.2019 
அலுவலக உதவியாளர் பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நடைபெறும் தேதிகள்: 17.08.2019,18.08.2019 & 25.08.2019 

ஆபீசர் பணிகளுக்கான முதன்மைத்தேர்வு நடைபெறும் தேதி: 22.09.2019
அலுவலக உதவியாளர் பணிகளுக்கான முதன்மைத்தேர்வு நடைபெறும் தேதி: 29.09.2019

தேர்வுக்கட்டணம்:
ஆபீசர் (Scale I,II & III) போன்ற பணிகளுக்கான தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.100
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற பிரிவினர் - ரூ.600

அலுவலக உதவியாளர் (Multipurpose) போன்ற பணிகளுக்கான தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.100
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற பிரிவினர் - ரூ.600

வயது வரம்பு: (01.06.2019 அன்றுக்குள்)
1. ஆபீசர் (Scale - III): சீனியர் மேனேஜர் என்ற பணிக்கு குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை இருத்தல் வேண்டும்.

2. ஆபீசர் (Scale - II): மேனேஜர் என்ற பணிக்கு குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 32 வயது வரை இருத்தல் வேண்டும்.

3. ஆபீசர் (Scale - I): அசிஸ்டெண்ட் மேனேஜர் என்ற பணிக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருத்தல் வேண்டும்.

4. அலுவலக உதவியாளர் (Multipurpose) என்ற பணிக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
ஆபீசர் (Scale I,II & III) மற்றும் அலுவலக உதவியாளர் (Multipurpose) போன்ற பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாது கணினி சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கூடுதலாக பகுதி சார்ந்த மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு:
மேனேஜர், சீனியர் மேனேஜர் போன்ற பணிகளுக்கு பணி சார்ந்த முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.ibps.in/crp-rrb-viii/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.ibps.in/wp-content/uploads/CRP_RRB_VIII_ADVT_15_06_2019.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com