தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்த பின் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு, பேராசிரியர்களின் ஊதிய உயர்வு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை 3 மடங்காக உயர்த்த பரிந்துரை செய்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பல்கலைக்கழக வளாகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு பருவத்திற்கும் கல்விக் கட்டணத்தை 8 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 20 ஆயிரமாக உயர்த்த பல்கலைக்கழகம் முடிவு செய்து, அதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் 2019-20ஆம் கல்வியாண்டு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.