ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கழகம், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் தமிழகம் முழுவதுமுள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது.
அதில், மாணவர்கள், பெற்றோர் / பாதுகாவலர் ஆன்லைன் மூலமாக ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யவேண்டும் எனவும், பதிவு செய்ததும் வரும் மின்னஞ்சலை கல்லூரி அல்லது பல்கலைக்கழக சிறப்பு அலுவலருக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரமாணப் பத்திரத்தை www.antiragging.in அல்லது www.amanmovement.org ஆகிய இணையதளங்களில் பதிவுசெய்யவும், மாணவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பமிட்டு உறுதி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.