தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு அக்டோபர் 1 முதல் தொடங்கியுள்ளது.
பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், செவித்திறன் பேச்சு மற்றும் மொழிநோய்க்குறியியல், ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோதெரபி, கார்டியோ ப்லமனரி பெர்மியூஷன் டெக்னாலஜி உள்ளிட்ட 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஒற்றைச் சாளர முறை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை அக்டோபர் 15ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல்வழியில் அனுப்பிவைக்கவேண்டும். பட்டியல் இனத்தவர், அருந்ததியர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈவெரா பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10
அஞ்சல்வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 17.10.2020
விவரங்களுக்கு: 98842 24648, 98842 24649