தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலையுடன் இணைக்கப்பட்டு கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2020-2021 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புகள்
இளங்கலை ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, அனிமேஷன் அண்ட் விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய படிப்புகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பிளஸ் டூ படித்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்துப் படிப்புகளும் நான்கு ஆண்டு இளங்கலை படிப்புகள்.
கல்வித்தகுதி
ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் இன்டர்மீடியட் படிப்புக்கு பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்தவராகவோ அல்லது வொகேஷனல் படிப்பில் புகைப்படக்கலை படித்தவராகவோ அல்லது எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் டிப்ளமோ படித்தவராகவோ இருக்கவேண்டும்.
இளங்கலை ஆடியோகிராஃபி படிப்புக்கு பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல் படித்தவராகவோ அல்லது வொகேஷனல் படிப்பில் ரேடியோ அண்ட் டிவி அல்லது வீட்டு எலெக்ட்ரானிக் கருவிகள் பற்றிப் படித்தவராகவோ எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் டிப்ளமோ படித்தவராகவோ இருக்கவேண்டும்.
இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, அனிமேஷன் அண்ட் விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய படிப்புகளுக்கு பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண்கள் அவசியம். அனைத்துப் படிப்புகளுக்கும் பொதுப்பிரிவினருக்கு வயதுவரம்பு 24 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். பட்டியலின மாணவர்கள் 26 வயதிற்குள் இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக விண்ணப்பம் செய்யவேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 200. பட்டியலின மாணவர்கள் 60 ரூபாய்க்கான டிமாண்ட் டிராப்ட் அனுப்பி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் சாதிச் சான்றிதழையும் இணைக்க வேண்டும். இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நேரில் விண்ணப்பங்களைப் பெற மாணவர்கள் யாரும் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணத்தை முதல்வர், எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600113 என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க டிமாண்ட் டிராப்ட்டாக எடுக்கவேண்டும்.
பின்னர் சென்னை மாணவர்கள் ரூ. 30 ரூபாய், சென்னையைத் தவிர மற்ற மாணவர்கள் ரூ. 47. பிறமாநில மாணவர்கள் ரூ. 71 மதிப்புள்ள அஞ்சல்தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையுடன் (30X25 செ.மீ அளவுள்ள) டிமாண்ட் டிராப்ட்டை இணைத்து அனுப்பி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். கூடுதல் தகவல்களுக்கு படிப்புகள் பற்றிய தகவல் அறிக்கையைப் படித்துக்கொள்ளவும்.
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: முதல்வர், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி வளாகம், தரமணி, சென்னை – 600113
முக்கியமான நாட்கள்
விண்ணப்ப விற்பனை தொடங்கிய நாள்: 30.7.2020
விண்ணப்பம் பெறவேண்டிய கடைசி நாள்: 26.8.2020
பூர்த்திசெய்த விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள்: 1.9.2020. மாலை 5 மணி வரை.