டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையும், வேலைவாய்ப்புகளும்: A - Z வழிகாட்டுதல்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையும், வேலைவாய்ப்புகளும்: A - Z வழிகாட்டுதல்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையும், வேலைவாய்ப்புகளும்:  A - Z வழிகாட்டுதல்
Published on

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன? எங்கெல்லாம் படிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? மார்க்கெட்டிங் துறையில் வேலைவாய்ப்பு எப்படி உள்ளது? டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் இளங்கலை உள்ளதா? என்பது குறித்து பார்க்கலாம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையும், வேலைவாய்ப்புகளும்

பட்டயப் படிப்பு: Diploma in Digital Marketing Courses, Professional Diploma in Digital Marketing Courses

இளநிலை படிப்பு: BBA in Digital Marketing, UG Program in Digital Marketing Courses

முதுநிலைப் படிப்பு: MBA Digital Marketing, MA in Digital Marketing Courses and Creative Marketing

துறை சார்ந்த வேலைவாய்ப்புகள்: Market Research Analyst, Content Marketer/Manager, Digital Marketing Consultant, Conversion Rate Optimizer, SEO Manager/Professional, Email Marketer

இந்தத் துறையில் ரூ.25,000 முதல் 40 ஆயிரம் வரை கல்வித் தகுதிக்கேற்ப அடிப்படை சம்பளம் பெறலாம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையை தேர்வு செய்வோர் என்னென்ன திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? அத்துறையில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

ஃபேஸ்புக், கூகுளில்கூட டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி கற்கலாம். சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரிமாற்றம் செய்ய தெரிந்திருக்க வேண்டும். வீடியோக்களை எடிட் செய்ய கற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது. விளம்பரப்படுத்துதலின் நுணுக்கங்களை அறிந்திருப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து கொள்வது அவசியம்.

வேறொரு துறையில் பணியாற்றிக் கொண்டே டிஜிட்டல் மார்கெட்டிங் துறையிலும் சாதிக்கலாம். ஃபேஸ்புக், கூகுள் தளங்களும் டிஜிட்டல் மார்கெட்டிங் பாடப்பிரிவுகளை கற்றுத் தருகின்றன. டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் 90% சான்றிதழ் படிப்புகள் இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com