தமிழகம் முழுவதும் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 64.12 லட்சமாக உயர்ந்துள்ளது. இது ஆகஸ்ட் மாத நிலவரம்.
இதுதொடர்பான புள்ளிவிவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 60 லட்சத்துக்கும் அதிகமாக இருந்துவருகிறது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி 64 லட்சத்து 12 ஆயிரத்து 327 பேர் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ளோரில் 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 7 ஆயிரத்து 813 பேரும், 18 முதல் 23 வயது வரையுள்ள பலவகைப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16 லட்சத்து 99 ஆயிரத்து 798 பேரும் அடங்கியுள்ளனர்.
மேலும், 24 முதல் 39 வயது வரை அரசுப் பணி வேண்டி காத்திருப்போர் 3 லட்சத்து 39 ஆயிரத்து 630 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிர்ந்த பதிவுதாரர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 55 ஆயிரத்து 961 பேரும், 58 வயதுக்கு அதிகமானோர் 9 ஆயிரத்து 125 பேரும் உள்ளதாக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.