பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான கருத்துக் கேட்பில் கல்வியாளர்கள், பெற்றோர்கள் என 60% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தக் கருத்துக்கணிப்பு நாளையும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கருத்துக் கேட்பு அடிப்படையில் முதல்வரிடம் நாளை அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமர்பிக்கிறார்.
முன்னதாக, கொரோனா 2 வது அலை காரணமாக சிபிஎஸ்இ 12 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று முன் தினம் தெரிவித்தார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப +2 தேர்வு நடத்துவது தொடர்பான முடிவை மாநில அரசுகள் எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு 2 நாட்களில் முடிவெடிக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.