பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர், Executive Trainee உள்ளிட்ட 150 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி உள்ள பட்டதாரி இளைஞர்கள், அக்டோபர் 4-ம் தேதிக்குள் https://careers/bhel.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் சிவில் பொறியாளர்களுக்கு 40 காலிபணியிடங்கள், மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கு 30 காலிபணியிடங்கள், ஐடி பொறியாளர்களுக்கு 20 காலிபணியிடங்கள் உள்ளிட்ட மொத்தம் 150 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல், மெட்டலர்ஜி, வணிகவியல், மனித வள மேம்பாட்டாளர் என பல்வேறு பிரிவுகளில் இந்த காலிபணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சம்பள விவரம்:
BHEL இல் பொறியாளர்/எக்ஸிகியூட்டிவ் டிரெய்னிகளாக சேரும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு பயிற்சி பெறுவார்கள். அந்த பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு, அடிப்படை ஊதியம் ரூ. 50,000 வரை வழங்கப்படும். ரூ. 50,000-1,60,000 வரை ஊதியம் வழங்கப்படும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, பயிற்சியாளர்கள் பொறியாளர்கள்/நிர்வாகிகளாக அங்கேயே பணியமர்த்தப்படுவர். அப்போது ரூ.60,000-1,80,000/ வரை வழங்கப்படும்.