தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் உடல்நலன், மனநலனை கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முடிவு செய்யப்படும். அந்த முடிவுகளின் அடிப்படையிலே தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்   

முன்னதாக இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சி பாரதம் ஆகிய 5 கட்சிகள், பிளஸ் டூ பொதுத்தேர்வு நடத்தக்கூடாது என வலியுறுத்தின. அதே நேரம் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய 7 கட்சிகள் பிளஸ் டூ தேர்வை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தின. முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தது. தேர்வை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பிளஸ் டூ தேர்வு தொடர்பாக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள், உளவியல் வல்லுநர்கள், ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் தொடர்பான அறிக்கை முதலமைச்சரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. தேர்வு குறித்து பல்வேறு தரப்பு கருத்துகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதையடுத்து பிளஸ் டூ தேர்வு பற்றிய இறுதி முடிவை தற்போது முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com