தொடர்ந்து மூடப்படும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் - காரணம் என்ன?

தொடர்ந்து மூடப்படும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் - காரணம் என்ன?
தொடர்ந்து மூடப்படும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் - காரணம் என்ன?
Published on

நடப்பு ஆண்டில் மட்டும் 101 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் தாமாக நிர்வாகத்தை மூடுவதற்கு விண்ணப்பித்துள்ளன.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பொறியியல் படிப்புகளுக்காக மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டிவந்தனர். இதனால் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு எப்போதும் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. வேலையிண்மையே அதற்குக் காரணம். இதனால் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆண்டுக்கு ஆண்டு எம்.பி.ஏ போன்ற படிப்புகளை வழங்கி வரும் மேலாண்மை கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2015-16ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 66 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 2016-17ஆம் ஆண்டில் 76 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 101 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் தாமாக மூடுவதற்கு விண்ணப்பித்துள்ளன. அவற்றில் பெரும்பாலான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் மாநிலங்களில் முதல் இடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளது. அங்கு 37 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் 10 மேலாண்மை நிறுவனங்கள் மூடப்படுகின்றன. மேலாண்மை கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் பெருகியுள்ளதும், விளம்பரங்களின் மூலம் பல நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை நிரப்பி விடுவதுமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அத்துடன் மேலாண்மை கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com