கிருஷ்ணகிரி அருகே விடைத்தாள் மாயமானதால் மீண்டும் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
10,11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் மற்றும் வருகைப் பதிவை பொருத்து 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே விடைத்தாள் மாயமானதால் மீண்டும் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, மாணவியர்கள் சுமார் 15 ற்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு அருகே உள்ள டியூசன் சென்டரில் வைத்து 10 வகுப்பு தமிழ், மற்றும் அறிவியல் தேர்வை ஆசிரியர்கள் முன்னிலையில் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்துகிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர் முருகன் கூறுகையில், போச்சம்பள்ளி அருகே மத்தூர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் 15 பேரும் அவர்களது பெற்றோருடன் ரேங்க் கார்டு கையெழுத்து இடவே, ஆசிரியரின் இல்லம் அருகே சென்றனர் எனவும் அவர்களுக்கு மறுத்தேர்வு வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.