10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
Published on

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான தேர்வு கால அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 1 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. மார்ச் 7 முதல் ஏப்.16ஆம் தேதி வரை 11-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. மார்ச் 16 முதல் ஏப்.20-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மார்ச் 1 - தமிழ் முதல் தாள்
மார்ச் 2 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 6- ஆங்கிலம் இரண்‌டாம் தாள்
மார்ச் 9 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
மார்ச் 12- கணிதம், விலங்கியல், நுண் அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை
மார்ச் 15 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு பாட தேர்வு
மார்ச் 19 - இயற்பியல், பொருளியல்
மார்ச் 26- வேதியியல், கணக்குப்பதிவியல்
ஏப்ரல் 2 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
ஏப்ரல் 6 - ஆங்கில தொடர்பியல், ‌இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், மேம்பட்ட தமிழ் மொழி

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மார்ச் 7 - தமிழ் முதல் தாள்
மார்ச் 8 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 13 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 14 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 20 - கணிதம், விலங்கியல், நுண் அறிவியல், ஊட்டச்சத்து, உணவு முறைத் தேர்வு
மார்ச் 23 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல் தேர்வுகள்
மார்ச் 27 - இயற்பியல், பொருளியல். 
ஏப்ரல் 3 - வேதியியல், கணக்குப்பதிவியல்
ஏப்ரல் 9 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
ஏப்ரல் 13 - ஆங்கில தொடர்பியல், கணினி அறிவியல், உயிரிவேதியியல், மேம்பட்ட தமிழ் மொழித் தேர்வு
ஏப்ரல் 16 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் தேர்வுகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மார்ச் 16 - தமிழ் முதல் தாள்
மார்ச் 21 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 28 - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 4 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 10 - கணிதம்
ஏப்ரல் 12 - விருப்ப மொழித் தேர்வு
ஏப்ரல் 17 - அறிவியல்
ஏப்ரல் 20 - சமூக அறிவியல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com