"10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த இதுவே சரியான நேரம்" அரசு வழக்கறிஞர்

"10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த இதுவே சரியான நேரம்" அரசு வழக்கறிஞர்
"10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த இதுவே சரியான நேரம்" அரசு வழக்கறிஞர்
Published on


10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இதனை தொடர்ந்தும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தமிழக அரசு 1 முதல் 9 ஆம் வகுப்பை வரையிலான மாணவர்கள் தேர்வுகள் எழுதாமலேயே அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவர் என அறிவித்தது.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படுமா எனக் கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அரசு 10 ஆம் வகுப்பு தேர்வு மட்டும் கட்டாயம் நடத்தப்படும் எனக் கூறியது. இதற்கு பெற்றோர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இந்த ஆபத்தான சூழ்நிலையில் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டாம் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இது சம்பந்தமான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக அரசு சார்பாக ஆஜாரான வழக்கறிஞர் "
வரும் நாட்களில் நிபுணர்களின் கருத்துக்களின்படி தமிழகத்தில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிய வந்துள்ளது என்றும் ஆகவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் என்றும் அதனால் தேர்வுக்கு தடை விதிக்க கூடாது என வாதிட்டுள்ளார்."

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com