மத்திய அரசின் கீழ் செயல்படும் ‘இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தில், எக்சிகியூடிவ் கிரேடு - 4, 5, 6 என்ற பதவிகளின் கீழுள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
எக்சிகியூடிவ் கிரேடு - IV
எக்சிகியூடிவ் கிரேடு - V
எக்சிகியூடிவ் கிரேடு - VI
காலிப்பணியிடங்கள்:
எக்சிகியூடிவ் கிரேடு (IV) - 57
எக்சிகியூடிவ் கிரேடு (V) - 33
எக்சிகியூடிவ் கிரேடு (VI) - 06
மொத்தம் = 96 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 10.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2019
வயது வரம்பு:
அதிகபட்சமாக 52 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். பணிகளை பொறுத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு. இதற்கு குறிப்பிட்ட வயது தளர்வும் உண்டு.
ஊதியம்:
1. எக்சிகியூடிவ் கிரேடு - IV என்ற பதவியின் கீழுள்ள பணிகளுக்கு, குறைந்தபட்சமாக ரூ.1,15,200 முதல் அதிகபட்சமாக ரூ.1,28,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
2. எக்சிகியூடிவ் கிரேடு - V என்ற பதவியின் கீழுள்ள பணிகளுக்கு, குறைந்தபட்சமாக ரூ.1,29,600 முதல் அதிகபட்சமாக ரூ.1,44,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
3. எக்சிகியூடிவ் கிரேடு - VI என்ற பதவியின் கீழுள்ள பணிகளுக்கு, குறைந்தபட்சமாக ரூ.1,44,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,60,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, பி.இ / பி.டெக் / பி.எஸ்சி (Engg.) என்ற பட்டப்படிப்பில் பயின்று சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மெட்டலர்ஜி, இன்ஸ்ட்ரூமெண்டேசன் போன்ற ஏதேனும் ஒரு துறையில் 60% தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் அத்துறை சார்ந்த பணி அனுபவமும் பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
பணிகளை பொருத்து குறைந்தபட்சமாக 16 வருட பணி அனுபவமும், அதிகபட்சமாக 21 வருட பணி அனுபவமும் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://recruitment.eil.co.in/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வின் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும்,இது குறித்த தகவல்களை பெற
http://recruitment.eil.co.in/hrdnew/others/ONLINE%20detailed%20advertisement%202019-20-02.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.