தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் ஒன் பொதுத்தேர்வு தொடங்குகிறது.
முதல் முறையாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வை 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் எழுதுகின்றனர். தேர்விற்காக 2 ஆயிரத்து 795 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 43 ஆயிரத்து 190 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வில் காப்பியடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.