Tamil
Tamil
English

புதிய தலைமுறையின் ஜனநாயகப் பெருவிழா

உலகின் மிகப்பெரிய ஜனநாயகப் பெருவிழாக்களில் ஒன்று இந்திய நாடாளுமன்றத் தேர்தல். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவைக் கொண்டாடத் தயாராகி வருகிறது புதிய தலைமுறை. இதற்காக தொலைக்காட்சியில் உள்ள எல்லா அம்சங்களும் இடம் பெற்றிருக்கும் வகையில் சிறப்புப் பேருந்து ஒன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 'ஜனநாயகப் பெருவிழா' என்ற பெயரில், 'தேர்தல்னா புதியதலைமுறை' என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகமெங்கும் புறப்படக் காத்திருக்கிறது புதிய தலைமுறையின் தேர்தல் பேருந்து.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளுக்கும் இப்பேருந்து பயணிக்கும். இதில் நேரலை செய்யக்கூடிய கருவிகள், செய்தி அறை, விவாத அரங்கு என எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தென் தமிழகத்திலேயே பேருந்து ஒன்று, தொலைக்காட்சியாக மாற்றுரு பெற்றிருப்பது இதுவே முதல்முறை!

பயண வழியெங்கும் நடைபெறும் அரசியல் கட்சியினரின் பரப்புரைகள், தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள், நடுநிலையாளர்களின் அலசல்கள், என 360 கோணத்திலும் நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டத் திட்டமிடப்பட்டிருக்கிறது. தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளையும், எதார்த்த விமர்சனங்களையும் பதிவு செய்யும் 'மக்களுடன் புதிய தலைமுறை', முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ண ஓட்டத்தைப் படம் பிடிக்கும் ‘முதல் தலைமுறையுடன் புதிய தலைமுறை(18+)', தொகுதி வேட்பாளர்கள், கட்சித் தலைவர்களின் தேர்தல் வியூகம், கொடுத்த வாக்குறுதிகள் என மக்களின் மனசாட்சியாய் நின்று கேள்வி எழுப்பும் 'தலைவர்களுடன் புதிய தலைமுறை' போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நேயர்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. செய்தி அரங்கில் இருந்து ஒளிபரப்பப்பட்ட நேர்படப் பேசு நிகழ்ச்சி, தேர்தல் களத்தில் மக்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.

தமிழகத்தின் தென் முனையான கன்னியாகுமரியில் மார்ச் 25ம் தேதி (திங்கள்) அன்று நடைபெற இருக்கும் தொடக்க நிகழ்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

முதல் முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் நாள்தோறும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்டத் தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடைபெற இருக்கிறது. சைக்கிள் பேரணி, மாணவர்கள் பேரணி எனப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது

ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளையும் புதிய தலைமுறையின் நட்சத்திர நெறியாளர்கள் தொகுத்து வழங்க இருக்கின்றனர். தகிக்கும் வெயிலுக்கு இடையே, தலைவர்களின் அனல் பறக்கும் பரப்புரைகளில் தொடங்கி களத்தில் அரங்கேறும் அத்தனை நிகழ்ச்சிகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தக் காத்திருக்கிறது புதிய தலைமுறையின் ஜனநாயகப் பெருவிழா!

Puthiya Thalaimurai celebrates the Festival of Democracy’24!

Special Election Bus to traverse all 39 constituencies of Tamil Nadu

India’s parliamentary elections are a celebration of democracy. They’re among the world’s biggest events of this scale.

Puthiya Thalaimurai is gearing up to celebrate the Lok Sabha elections, held every 5 years. To capture the mood of the electorate, Puthiya Thalaimurai is running a special bus designed to accommodate all the paraphernalia of a television studio. Under the banner of 'Jananayaga Peruvizha' (‘Festival of Democracy’), Puthiya Thalaimurai's election bus is set to cover various locations across Tamil Nadu, proudly carrying the slogan 'Therdhalnaa Puthiya Thalaimurai (Election Means Puthiya Thalaimurai)'.

The special bus will journey through all 39 Lok Sabha constituencies in Tamil Nadu, equipped with facilities such as live-streaming tools and a discussion hall, effectively transforming it into a mobile newsroom. This marks the first instance of a bus being converted into a television studio in South India!

The itinerary includes capturing and presenting events from 360-degree angles, including political parties' campaigns, constituents' expectations, and analyses from neutral observers throughout the journey. Programs such as 'Makkaludan Puthiya Thalaimurai', which records the expectations and realistic criticisms of constituents, 'Mudhal Thalaimuraiyudan Puthiya Thalaimurai (18+)', which captures the perspectives of first-time voters, and 'Thalaivargaludan Puthiya Thalaimurai', acting as the voice of the people questioning the promises and election strategies of candidates and party leaders, are set to engage the audience. Additionally, the 'Nerpada Pesu' program, usually broadcast from the newsroom, will be conducted directly in front of the people in the election field.

A special inaugural program is scheduled for March 25 (Monday) at Kanyakumari, the southern tip of Tamil Nadu. Various dignitaries, including social activists and senior IAS officers, are expected to participate in the event.

Voter Awareness Program

Daily oath-taking events will be conducted in the presence of the District Election Officer to sensitize first-time voters. Additionally, various awareness programs such as cycle rallies and student rallies are planned.

All programs will be hosted by the star moderators of Puthiya Thalaimurai. As summer sets in, Puthiya Thalaimurai's 'Jananayaga Peruvizha' brings the heat of political campaigns and the excitement of the election field directly to the people.

பயணத்திட்டம்

Travel Plan

Date District
March 25 Kanniyakumari
March 26 Thirunelveli / Thenkasi
March 27 Thoothukudi / Virudhunagar
March 28 Ramnadapuram / Sivagangai
March 29 Madurai
March 30 Theni / Dindigul
March 31 Thiruchirappalli
April 1 Karur / Perambalur
April 2 Thanjavur
April 3 Nagapattinam / Mayiladuthurai
April 4 Kadalur / Kanchipuram
April 5 Puducherry / Villupuram
April 6 Virudhachalam / Tiruvannamalai
April 7 Salem / Namakkal
April 8 Tiruppur / Pollachi
April 9 Coimbatore
April 10 Erode / Nilgiris
April 11 Dharmapuri / Krishnagiri
April 12 Thiruvannamalai / Arani
April 13 Vellore / Arakkonam
April 14 Thiruvallur / Sripuram
April 15 Kanchipuram
April 16 North Chennai / Central Chennai
April 17 South Chennai / Central Chennai
தேதி தொகுதி
மார்ச் 25 கன்னியாகுமரி
மார்ச் 26 திருநெல்வேலி/தென்காசி
மார்ச் 27 தூத்துக்குடி/விருதுநகர்
மார்ச் 28 ராமநாதபுரம்/சிவகங்கை
மார்ச் 29 மதுரை
மார்ச் 30 தேனி/திண்டுக்கல்
மார்ச் 31 திருச்சி
ஏப்ரல் 1 கரூர்/பெரம்பலூர்
ஏப்ரல் 2 தஞ்சாவூர்
ஏப்ரல் 3 நாகப்பட்டினம்/மயிலாடுதுறை
ஏப்ரல் 4 கடலூர்/சிதம்பரம்
ஏப்ரல் 5 புதுச்சேரி
ஏப்ரல் 6 விழுப்புரம்/கள்ளக்குறிச்சி
ஏப்ரல் 7 சேலம்/நாமக்கல்
ஏப்ரல் 8 திருப்பூர்/பொள்ளாச்சி
ஏப்ரல் 9 கோவை
ஏப்ரல் 10 ஈரோடு/நீலகிரி
ஏப்ரல் 11 தர்மபுரி/கிருஷ்ணகிரி
ஏப்ரல் 12 திருவண்ணாமலை/ஆரணி
ஏப்ரல் 13 வேலூர்/அரக்கோணம்
ஏப்ரல் 14 திருவள்ளூர்/ஸ்ரீபெரும்புதூர்
ஏப்ரல் 15 காஞ்சிபுரம்
ஏப்ரல் 16 வடசென்னை
ஏப்ரல் 17 தென்சென்னை/மத்திய சென்னை
day-1

Teasers

Election Playlists

Ending Ceremony

நிகழ்ச்சி நிரல்

Program Plan

Press coverages

Sponsors

Associate Sponsors

Special Sponsors