உத்திரபிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோட்டு என்ற இளைஞர். அவரின் வயது 27 . இவர் தினமும் காலையில் தன்னுடைய கிராமத்தில் வீட்டின் அங்கே உள்ள சிவன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன் காரணம் காதல் தான். இளைஞர் சோட்டு ஒரு பெண்ணை காதலிப்பதாக தனது குடும்பத்திடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த அவர் தெய்வத்திடம் சென்று முறையிட்டால் இதற்கு நிச்சயம் தீர்வு கிடக்கும் என்று நினைக்கவே தனது வீட்டின் அருகில் இருந்த சிவன் கோவிலுக்கு சென்று தினமும் காலையில் சிவலிங்கத்தை வழிபட்டு வந்துள்ளார். ஆனால், தனது குடும்பத்தினரின் மனம் மாற்ற உதவ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி வந்தார்.
சிறிது நாட்களுக்கு பிறகு பூஜை செய்தும் பலனில்லை என்று அவர் உணர்ந்ததால் அதிருப்தியில் தான் வழிபட்டு வந்த சிவலிங்கத்தை திருடி சென்றுள்ளார் என்று போலீசார். தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி வட்ட அதிகாரி அபிஷேக் குமார் புதன்கிழமை பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “செப்டம்பர் 1 ஆம் தேதி அதிகாலையில் கோவிலில் இருந்த சிவலிங்கத்தை சோட்டு திருடி அருகில் இருந்த புதருக்குள் மறைத்து விட்டார்” என்று தெரிவித்தார்.
சிலை காணமல் போய் விட்டது என்று பொது மக்கள் புகார் அளிக்கவே, "செப்டம்பர் 3 அன்று சந்தேகத்தின் பேரில் சோட்டுவை நாங்கள் கைது செய்தோம். பின்னர் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்" என்று போலீசார் தெரிவித்தனர்.
இதன் பின்னர் கடத்தப்பட்ட சிவலிங்கமானது திருப்பி அந்த இடத்தைற்கே கொண்டு செல்லப்பட்டு கோவிலினுள் வைக்கப்பட்டது.