வேலூர் மாவட்டத்தில் திருமணம் ஆகி 2 நாளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். புவனேஸ்வரிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 15-ம் தேதி திருமணம் ஆகிய நிலையில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
புவனேஸ்வரியின் உடலை கைபற்றி வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆர்.டி.ஓ-வும் விசாரணை செய்ய உள்ளார்.
- குமரவேல்
தொடர்புடைய செய்தி: ஓமலூர்: அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் நோயாளி