கொல்லப்படும் வனவிலங்குகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

கொல்லப்படும் வனவிலங்குகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
கொல்லப்படும் வனவிலங்குகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
Published on

தமிழகத்திலுள்ள காடுகளில் விலங்குகளை கொன்று உடலை கடத்துவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்கக் கோரி வழக்கு. வழக்கு குறித்து மத்திய வனத்துறை இயக்குநர், தமிழ்நாடு வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நித்திய சௌமியா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தமிழ்நாட்டில் 3305 கிலோ மீட்டர் காடுகள் உள்ளன. இந்த காடுகளில் பல்வேறு அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் தற்போது தமிழக காடுகளில் வாழும் உயிரினங்களின் பல், தந்தம், ஒடு போன்றவைகளுக்காக வேட்டையாடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

உலகளவில் சட்ட விரோதமாக விலங்குகளின் விலையுயர்ந்த உறுப்புகளுக்காக நடைபெறும் கடத்தல்கள் அதிகமாக இந்தியாவிலேயே நடைபெறுகின்றன. இதற்கு இந்தியாவில் சட்டங்கள் கடுமையாக இல்லாததே காரணம், இந்தியாவில் 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரை 3 ஆயிரம் எறும்பு தின்னிகள் ஓடுகளுக்காக கொல்லப்பட்டுள்ளன. 25 கடத்தல்காரர்களிடம் இருந்து 5000 கிலோ ஓடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எறும்பு தின்னிகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.

மருத்துவ பயன்பாட்டிற்காக ஏறும்பு தின்னியின் ஓடுகள் அதிகப்படியாக சீனா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. மேலும் காடுகளில் உள்ள அரிய வகை மரங்களான சந்தனம், தேக்கு போன்றவை சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. காடுகளின் உள்ளே கஞ்சா செடிகள் வளர்த்து கடத்தப்படுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2021 ஜனவரி 5-ஆம் தேதி 5.75 கிலோ எடையுள்ள எறும்பு தின்னி ஓடுகள், 6 சிறுத்தை நகங்கள், 6 கிலோ எடையுள்ள 2 யானையின் தந்தங்கள் ஆகியவை வனத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேபோல் 2020 மே 20-ஆம் தேதி கொடைக்கானல் காடுகளில் 1 கிலோ கஞ்சா வளர்க்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் கண்டுபிடித்து அளித்துள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஏறும்பு தின்னி ஓடுகள், சிறுத்தை நகங்கள், யானை தந்தங்கள் ஆகியவை தமிழ்நாட்டில் சமீபத்தில் கடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை வேண்டும் என கூறினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை துறை இயக்குனர், தமிழ்நாடு வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com