சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், ’’நான் சவூதி அரேபியாவில் சொந்தமாக டிரேடிங் பிசினஸ் செய்துவருகிறேன். கடந்த 2020-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தபோது, தெரிந்த நண்பர் மூலமாக போரூரைச் சேர்ந்த சுனிதா என்பவர் அறிமுகமானார். என்னிடம் பணம் இருக்கும் விவரத்தையும், கொரோனா காரணமாக ஏற்பட்ட முழு ஊரடங்கால் நான் மறுபடியும் வெளிநாடு செல்ல இயலாத சூழ்நிலையையும் சுனிதா தெரிந்துகொண்டார். அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களும் இணைந்து, என்னை அணுகி சென்னை, சின்னமலை, காசாகிராண்ட் அபார்ட்மெண்டில் Sun Boutique Pvt Ltd and Koyambedu Finance Association Pvt L.td ஆகிய பெயர்களில் நிறுவனங்கள் நடத்தி அதன்மூலமாக பல்வேறு டிரேடிங் பிசினஸ் செய்துவருவதாக என்னிடம் சுனிதா கூறி நம்பவைத்தார்.