புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மாஞ்சாலை அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் இசைமணி (45). இவர் சமூக நலத்துறையில் டிரைவர். இவர் மனைவி கோமதி (41). இவர்களுக்கு இளஞ்செழியன், இசைவேந்தன் ஆகிய 2 மகன்கள். மது பழக்கம் கொண்ட இசைமணி, தினமும் போதையில் மனைவியுடன் தகராறு செய்வாராம். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் தகராறு செய்தாராம். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
’இதே பொழப்பா போச்சே’ என்று கடுப்பான கோமதி, கடப்பாரையால் இசைமணியை தாக்கினார். சரிந்துவிழுந்தார் அவர். பின் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டார் கோமதி. அதிகாலை 3 மணியளவில் கோமதி கீழே இறங்கி வந்து பார்த்தபோது இசைமணி பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அப்போது தான் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த இசைமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோமதியை கைது செய்தனர்.