தருமபுரியில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்க முயன்ற துணை வட்டாட்சியரை அதிகாரிகள் கைது செய்தனர்.
காரிமங்கலம் மருளுக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர் தனது தந்தை பெயரில் உள்ள விவசாய மின் இணைப்பை தன் பெயருக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக தடையில்லாச் சான்று வழங்க துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதை லஞ்ச ஒழிப்புத்துறையில் பழனியப்பன் புகார் கொடுத்தையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விரைந்துள்ளனர்.
அப்போது லஞ்சம் ஒழிப்புத் துறையினரிடம் இருந்து கார்த்திகேயன் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை அதிகாரிகள் விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். லஞ்சம் வாங்கிய துணை வட்டாச்சியர் கையும் களவுமாக பிடிப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட கார்த்தியேகனிடம் அதிகாரிகள் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.