மோசடி புகாரில் காஞ்சிபுரம் கதர் வாரிய கண்காணிப்பாளருக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டணை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கதர் கிராம தொழில் வாரியத்தின் கண்காணிப்பாளராக சின்னக்கண்ணு என்பவர் இருந்தபோது கதர் வாரியத்தில் போலி கணக்குகள் எழுதி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்திய கதர் வாரியம் சின்னக்கண்ணு மீது வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சின்னக்கண்ணை விடுதலை செய்தது.
சின்னக்கண்ணு விடுதலையை எதிர்த்து மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையில் மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டது. இதனை அடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, 33 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், 48,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.