மனநலம் பாதிக்கப்பட்டவரால் தூங்கிக் கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்

மனநலம் பாதிக்கப்பட்டவரால் தூங்கிக் கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்
மனநலம் பாதிக்கப்பட்டவரால் தூங்கிக் கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சாலையோரம் படுத்திருந்த முதியவரை, கற்களால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் நந்தா. பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் இருந்து வெளியேறிய கோகுல் நந்தா, ஈரோடு மாவட்டம் சோலார் வழியாக பள்ளிபாளையம் வரும் வழியில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பள்ளிபாளையம் ஆவராங்காடு பகுதியில் சாலையின் ஓரமாக தூங்கிக் கொண்டிருந்த முதியவர் வேலப்பன் (70) என்பவரை கற்களால் பலமாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த முதியவரை அப்பகுதியினர் மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் வேலப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்த கோகுல் நந்தாவை பள்ளிபாளையம் காவல்நிலைய காவலர் சதீஷ்குமார் என்பவர் தனிநபர் ஒருவராக போராடி, அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து பொறியியல் பட்டதாரி கோகுல் நந்தா மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை கீழ்பாக்க மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com