தற்போது நமது நாட்டில் சாலை விபத்துகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சாலைவிதிகளை பின்பற்றாததால் ஏற்படும் விபத்துகள்தான் அதிகம். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் போக்குவரத்து விதிகளை மீறி சென்ற காரை தடுக்க முயன்ற காவலரையே இடித்துச்சென்ற வீடியோ ஒன்றை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.
அதில், ‘’ஜமால்பூரில் போக்குவரத்து விதிகளை மீறிச்சென்ற வாகனத்தை நிறுத்த முயன்ற காவலர் காரின் முன்பகுதியால் இடித்து இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளது.
அதற்கு, ‘’இதுபோன்ற வழக்குகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அரசாங்கம் காவலர்களின் உயிரை பணயம் வைக்கிறது’’ என்பது போன்ற பல கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.