குற்றம்
ஒரு மலையே சாராயம் காய்ச்சும் தொழிற்சாலைபோல் மாறியது கண்டு மிரண்டுபோன காவல்துறை.. எங்கே தெரியுமா?
அங்கேயே ஒரு காவல் கூடாரம் அமைத்து சாராயம் காய்ச்சுவது தடுக்கப்படும் .
வேலூர் மாவட்டத்தின் சாத்கர் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தச்சென்ற காவல் துறையினர் சென்றனர். வேலுர் சரக டி.ஐ.ஜி.முத்துசாமி, மாவட்ட எஸ்.பி.மணிவண்ணன் ஆகியோர் தங்களது குழுக்களுடன் சாத்கர் மலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அம்மலை முழுதும் ஏராளமான சாராய பேரல்கள் இருந்ததைக்கண்டு அதிர்சியுற்றனர். அம்மலை முழுவதும் சாராயம் காய்ச்சும் தொழிற்சாலைப்போல பயன்படுவதைக்கண்டு அதிர்ந்தனர். கண்டுபிடித்த ஊரல்களை கீழே ஊற்றி அழித்தபொழுது சாராயம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.
இம்மலை முழுதும் பலவருடங்களாக சாராயம் காய்ச்சி வருவது கண்டு வேலூர் போலீசார் அதிர்ந்தனர். மேலும், அங்கேயே ஒரு காவல் கூடாரம் அமைத்து சாராயம் காய்ச்சுவது தடுக்கப்படும் என்றார்.