ரோந்து போலீசால் நிறுத்தப்பட்ட வாகனம்... ஓட்டம் பிடித்த ட்ரைவர் - சிக்கியதோ 1 டன் குட்கா!

ரோந்து போலீசால் நிறுத்தப்பட்ட வாகனம்... ஓட்டம் பிடித்த ட்ரைவர் - சிக்கியதோ 1 டன் குட்கா!
ரோந்து போலீசால் நிறுத்தப்பட்ட வாகனம்... ஓட்டம் பிடித்த ட்ரைவர் - சிக்கியதோ 1 டன் குட்கா!
Published on

தணிக்கைக்காக வாகனத்தை நிறுத்திய ரோந்து போலீசார் வாகனத்தை சாலையிலேயே நிறுத்தி விட்டு தலை தெறிக்க ஓடிய டிரைவர். ஒரு டன் குட்காவுடன் வாகனம் சிக்கியது.

சென்னை பீர்க்கன்காரணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர் சந்திப்பு, வெளிவட்ட சாலை, மதனபுரம் அருகே ரோந்து போலீசார் வாகன தணிக்கை செய்வது வழக்கம். அவ்வாறு வாகன தணிக்கை செய்தபோது சரக்கு வாகனம் ஒன்று அவ்வழியே வந்துள்ளது.

வாகனத்தை ரோந்து பணியில் இருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த முரளி என்பவரும் உதவி ஆய்வாளர் லட்சுமணன் என்பவரும் நிறுத்தியுள்ளனர். வாகன ஓட்டுநர் சரக்கு வாகனத்தை சாலையிலேயே நிறுத்தி விட்டு ஓடிவிட்டார். போலீசாரும் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அப்போது வாகனத்தின் பூட்டை உடைத்து பார்த்த போது வாகனத்தினுள் 1 டன் அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பிச்சென்ற நபர்களை பீர்க்கன்காரணை ஆய்வாளர் பொன்ராஜ் தீவிரமாக தேடி வருகின்றார்.

குறிப்பாக ஊர்காவல் படையை சேர்ந்த முரளி என்பவரின் துணையோடு ரோந்து வாகன உதவி ஆய்வாளர்கள் சில வருடங்களாக அவ்வழியே வரும் வாகனங்களை மடக்கி 100, 200, 500 வீதம் பணம் வசூல் செய்து பங்கு பிரித்து கொள்கின்றனர். இந்த பிரச்னை குறித்து வீடியோ ஆதாரங்களோடு பலமுறை உளவுத்துறை போலீசார் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் முரளியுடன் சேர்ந்து பண வசூலில் ஈடுபடுவது வாடிக்கையாகதான் தொடர்ந்து வருகிறது.

தற்போது பிடிபட்ட சரக்கு வாகன ஓட்டுநரும் 100 அல்லது 200 ரூபாயை கொடுத்திருந்தால் அந்த வாகனத்தையும் விட்டு விட்டிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com