உ.பி: மதுபோதையில் வாய்த் தகராறில் ஈடுபட்ட நண்பர்கள்; கொலையில் முடிந்த துயரம்!

நண்பர்களின் மது போதையில் விளையாட்டாக தொடங்கிய தகராறு; மரணத்தில் முடிந்த சோகம்
மாதிரிபடம்
மாதிரிபடம்கூகுள்
Published on

உத்திரபிரதேசம் மீரட்டில் மது போதையில் நண்பர் மேல் சிறுநீர் கழித்த தகராறில், நண்பனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீரட் மாநிலம் சரிஹாசி கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான ராகுல் குமார். இவர் அப்பகுதியில் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் இருக்கின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் ராகுலை நண்பர்கள் சிலர் விருந்துக்கு அழைத்துள்ளனர். நண்பர்களுடன் விருந்தில் கலந்துக்கொள்வதற்காக ராகுலும், கடந்த வியாழக்கிழமை புலந்த்ஷாஹார் சென்றுள்ளார்.

அங்கு நண்பர்களுடன், விருந்தில் கலந்துக்கொண்டு, மகிழ்ச்சியாக பொழுதை போக்கியபிறகு, நண்பர்கள் அனைவரும் அவரவர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதே போல் ராகுலும் தனது வீட்டிற்கு திரும்ப நினைத்து நண்பர்கள் நால்வருடன் ஒரு காரில் கிராமத்தை நோக்கி திரும்பியிருக்கிறார். நண்பர்கள் அனைவரும் போதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

முழுப்போதையில் இருந்த ராகுல், நண்பர்களில் ஒருவரான அன்கூர் மேல் விளையாட்டுதனமாக சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த அன்கூர் ராகுலை திட்ட... பதிலுக்கு ராகுல் அன்கூரை திட்ட... இதில் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவரையும் நண்பர்கள் சமாதான படுத்த முயன்றுள்ளனர். ஒருகட்டத்தில் அன்கூரின் தகாத வார்த்தையால், ராகுல் அன்கூரின் கண்ணத்தில் அறைந்துள்ளார். பிறகு ஊர் வந்ததும் அவரவர்கள் இறங்கி வீட்டிற்கும் சென்று விட்டனர்.

மாதிரிபடம்
இரக்கமில்லையா இயற்கையே! பனிப்புயலில் மரணித்த காதல் தம்பதி; ஒரேநாளில் பிறந்து ஒரேநாளில் இறந்த துயரம்!

இருப்பினும், அன்கூரால், நடந்த சம்பவத்தை மறக்கமுடியவில்லை. தன்னை அவமானப்படுத்திய ராகுலை பழிவாங்கநினைத்து, அன்றிரவே கத்தியுடன் ராகுல் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மது போதையிலிருந்த ராகுல், அன்கூர் வந்ததுகூடத் தெரியால் வரண்டாவில் படுத்துத்தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். ஆத்திரத்துடன் வந்த அன்கூர் தான் கொண்டுவந்த கத்தியால் ராகுலை பலமுறை குத்தியுள்ளார்.

ராகுலின் அலறல் சத்தம் கேட்ட அவரது தந்தை ஓடி வந்து பார்க்கும் பொழுது, ராகுல் சம்பவ இடத்தில் இறந்து கிடந்துள்ளார். பிறகு ராகுலின் தந்தையான சத்திரபால் சிங் கொடுத்த தகவலின்பெயரில் அன்கூரை கைது செய்த போலிசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com