உடுமலை அருகே மண்ணில் கஞ்சாவை புதைத்து வைத்து விற்பனை செய்ததாக இரு சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி நகரில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜ் கண்ணன் தலைமையிலான போலீசார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சகோதரிகள் இருவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துவருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார்; தீவிரமாக விசாரித்ததனர். ஆப்போது 5 கிலோ 200 கிராம் கஞ்சாவை இருவரும் மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், வீரமணி மற்றும் பாப்பாத்தி ஆகிய இரு சகோதரிகளை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது