சென்னை புறநகரில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக 2 பேர் கைது

சென்னை புறநகரில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக 2 பேர் கைது
சென்னை புறநகரில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக 2 பேர் கைது
Published on

சென்னை புறநகரில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை ஆள்மாறாட்டம் மூலம், போலியான ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள காலியான இடங்களை நோட்டமிட்டு அதன் நகல் ஆவணங்களை பெற்று நிலத்தின் உரிமையாளர் போன்றே ஆள்மாறாட்ட நபரை வைத்து போலி ஆவணங்களை உருவாக்கி விற்பனை செய்து வந்ததாக. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், தன்னுடைய 2373 சதுர அடி இடத்தையும், புழல் காவாங்கரையைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் நிலத்தையும், சேகர் என்பவருக்குரிய காலி இடத்தையும், அதேபோல் ஸ்ரீதரன் என்பவருக்குரிய 2145 சதுர அடி இடத்தையும், அஜய் பொன்னுமணி என்பவரின் 4800 சதுரடி நிலத்தையும் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய அம்பத்தூர் புத்தகரத்தை சேர்ந்த இன்ப மதிவதனன், திருவள்ளூரை சேர்ந்த டேவிட் வாலிஸ் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து பல இடத்திற்கு போலியான ஆவணம் தயார் செய்தும், ஆள்மாறாட்ட நபர்கள் மூலம் நில அபகரிப்பு செய்து அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழந்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கைது செய்த இருவரையும், பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com