நெய்வேலியில் இருவேறு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் முன் விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தி பழி தீர்க்க திட்டம் திட்டியதாக கடலூர் மாவட்ட தெர்மல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முருகன் கோவில் தெருவில் ஒரு வீட்டுக்கு பின்னால் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு மற்றும் தைல மர தோப்பில் பிளாஸ்டிக் வாளியில் மறைத்து வைத்திருந்த 3-க்கும் மேற்பட்ட குண்டுகளை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து அகிலன் (23) மற்றும் அவனது நண்பனான 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் பிடித்து நாட்டு வெடிகுண்டை எங்கு தயாரிக்கப்பட்டது? எத்தனை வெடிகுண்டுகள்? யாரைப் பழி தீர்ப்பதற்காக? இதில் தொடர்புடைய நபர்கள் யார் யார்? என பல கோணத்தில் நெய்வேலி தெர்மல் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நாட்டு வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய உள்ளனர். இதனால் நெய்வேலி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.