ராக்கி கயிறு கட்டிய சிறிது நேரத்தில் அக்காவை உடன்பிறந்த தம்பிகள் இரண்டு பேர் கொலை செய்த கொடூர சம்பவம் அகமதாபாத்தில் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த பெண் சவுகி அலியாஸ். இவர் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவர் இறந்த பின்னர் ராம்ஸ்வரூப் சாது என்பவரை திருமணம் செய்து வாழ்ந்துகொண்டிருந்தார். இவரது உடன்பிறந்த தம்பிகள் சஜிஜுல் ஷாயிக் மற்றும் ரோஜாலி ஷாயிக். சஜிஜூல் திருமணம் முடிந்த விவாகரத்து பெற்றவர். ரோஜாலி திருமணத்திற்காக காத்திருப்பவர்.
தனித்தனியே வசித்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி சந்தித்துக்கொண்டனர். அப்போது இவர் தங்கள் அக்கா சவுகியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கொலை செய்த பின்னர் அக்காவின் நகையை திருடி பங்கு போட்டுக்கொள்ளவும் திட்டமிட்டிருக்கின்றனர். ஏனென்றால் சஜிஜுல் வேறொரு திருமணம் செய்ய முடியாமலும், அவர் திருமணம் முடிந்த பின்னரே தான் திருமணம் செய்யலாம் என ரோஜாலியும் காத்திருந்ததால், இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
திட்டமிட்டபடியே, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அக்காவின் வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு தம்பிகள் இருவருக்கும் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு அக்கா சவுகி ராக்கி கயிறு கட்டியுள்ளார். பின்னர் இருவருக்கும் டீ கொடுத்துள்ளார். டீ-யை குடித்த பின்னர் இருவரும் திட்டமிட்டபடியே அக்காவை குத்திக்கொன்றுள்ளனர். பின்னர் அவர் வீட்டிலிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக விசாரித்து வந்த போலீஸார், கொலையாளிகளான தம்பிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.