திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தேசிய பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் போலியான பாஸ்போர்ட் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் அதிகமாக உள்ளனர். இந்நிலையில், சென்னை மற்றும் கொச்சியைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள், சிறப்பு முகாமில் சந்தேகத்திற்கு இடமான சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கு போலியான பாஸ்போர்ட் எப்படி கிடைத்தது? அவர்கள் வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டனரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாம்: ஒரே ஆண்டில் இந்திய குடியுரிமையை துறந்த ஒன்றரை லட்சம் இந்தியர்கள்