திருச்சி: போலி கையெழுத்து போட்டு 18 ஏக்கர் நிலத்தை ரூ.19 கோடிக்கு விற்க முயற்சி - பாஜக நிர்வாகி கைது

திருச்சியில் போலி கையெழுத்து போட்டு 18 ஏக்கர் நிலத்தை ரூ.19 கோடிக்கு விற்க முயன்ற பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாஜக நிர்வாகி கைது
பாஜக நிர்வாகி கைது pt desk
Published on

செய்தியாளர்: வி.சார்லஸ்

ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் 18 ஏக்கர் பரப்பளவில் தென்னை நாற்றங்கால் உள்ளது. இதனை உரிமையாளர் ரங்கசாமி என்பவர், ஸ்ரீரங்கத்தில் உள்ள பாஜக விவசாய அணி மாநில நிர்வாகி கோவிந்தனுக்கு குத்தகைக்கு விட்டிருந்தார்.

பாஜக நிர்வாகி கைது
பாஜக நிர்வாகி கைது pt desk

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இடத்தின் உரிமையாளர் ரங்கசாமி கையெழுத்தை கோவிந்தன் போலியாக போட்டு ஆவணங்கள் தயாரித்து தேவராஜன் என்பவருக்கு 19 கோடி ரூபாய்க்கு விலை பேசி ஒப்பந்தம் போட்டுள்ளார். அதற்கு முன்பணமாக 5 கோடி ரூபாயை கோவிந்தன் வாங்கியள்ளார்.

பாஜக நிர்வாகி கைது
சென்னை: மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி - தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர் கைது

பின் வாங்கிய பணத்தை திருப்பித் தர முடியாமல், இடத்தையும் பதிவு செய்து தர முடியாமல் இருந்துள்ளார் கோவிந்தன். இந்நிலையில், தேவநாதன் திருச்சி மாநகர குற்றப் பிரிவு 2ல் இதுதொடர்பாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கோவிந்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Police station
Police stationpt desk

இதைத் தொடர்ந்து கோவிந்தனை கைது செய்த போலீசார், அவரை ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக நிர்வாகி கைது
திருச்சி: சினிமா பாணியில் ஊசி மூலம் உடலில் காற்றை ஏற்றி கொலை... மருமகள் உதவியோடு மகனை கொன்ற தாய்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com