சென்னை பல்லாவரத்தில் வாகன தணிக்கையின் போது 100 ரூபாய் லஞ்சம் கேட்ட போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கரன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி, ஓட்டுநரிடம் 100 ரூபாய் லஞ்சம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் பாஸ்கரன். அருகில் இருந்தவர்கள் அதனை வீடியோவாக தங்களது கைப்பேசியில் பதிவு செய்திருக்கின்றனர். அந்த காட்சிகள் சமூக வலைதளங்கள் வேமாக பரவியதை அடுத்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதில் பாஸ்கரன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச பணம் 100 ரூபாய்க்கு ஆசைப்பட்டதால் தற்போது பாஸ்கரனுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டதோடு பதவியிலிருந்தும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.