"கவுண்ட் டவுன் ஆரம்பம்"|சர்ச்சைக்குரிய கருத்தை முகநூலில் பதிவிட்டதாக ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் கைது

செங்குன்றம் அருகே தம்பியின் கொலையில் தொடர்புடைய துரோகிகள் வீட்டில் கவுண்ட் டவுன் ஆரம்பம் என முகநூலில் பதிவு செய்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்pt desk
Published on

செய்தியாளர்: எழில்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் கடந்தாண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக பிரமுகருமான பார்த்திபன் என்பவர் நடைப்பயிற்சி சென்ற போது ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் மாதம் சோழவரம் அருகே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Arrested
Arrestedpt desk

இந்த நிலையில், கொலை சம்பவம் நடந்து ஓராண்டானதை அடுத்து பார்த்திபனின் அண்ணனான நடராஜன் தனது தம்பி கொலைக்கு காரணமானவர்கள் வீட்டில், 'என் தம்பி நடத்திக் காட்டுவான், துரோகிக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம்' என சர்ச்சைக்குரிய வகையில் தமது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தனது தம்பியின் கொலை தொடர்பாக முகநூலில் மோதல் ஏற்படும் வகையில் பதிவிட்டதாக செங்குன்றம் காவல் துறையினர், தகவல் தொழிநுட்ப சட்டம் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்
டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது... என்ன காரணம்?

இதைத் தொடர்ந்து பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் நடராஜனை (58) செங்குன்றம் காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com