திருப்பூர்: உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 6 வங்கதேச இளைஞர்கள் கைது - போலீசார் விசாரணை

உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த பங்களாதேஷை சேர்ந்த ஆறு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பங்களாதேஷ் இளைஞர்கள் கைது
பங்களாதேஷ் இளைஞர்கள் கைதுpt desk
Published on

செய்தியாளர்: சுரேஷ்குமார்

வங்கதேசத்தை சேர்ந்த தன்வீர், ராஜீப்தவுன், எம்.டி.அஸ்லாம், எம்.டி.அல் அஸ்லாம், எம்.டி.ரூகு அமீன் மற்றும் சோமூன்சேக் ஆகிய ஆறு இளைஞர்கள் வேலை தேடி கவுகாத்தி வழியாக திருப்பூருக்கு வந்துள்ளனர். இதையடுத்து ஆறு பேரும் கூலிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்தவர்கள் என கூறி பணியில் சேர்ந்துள்ளனர்.

Arrested
Arrestedpt desk

இந்த நிலையில், நேற்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த அவர்கள், காவல்துறையினரை கண்டதும் வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேக அடிப்படையில், அவர்களை துரத்திப் பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

பங்களாதேஷ் இளைஞர்கள் கைது
அதெப்படி திமிங்கலம்! ”ரூ.2 லட்சம் கொடுத்தால் IPS ஆக்குறேன்” ஏமாந்த இளைஞர்.. பீகாரில் நூதன சம்பவம்!

விசாரணையில், அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பூருக்கு வேலை தேடி வந்ததும் அவர்களிடம் முறையான பாஸ்போர்ட் விசா இல்லை என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com