செய்தியாளர்: சுரேஷ் குமார்
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த மூன்று இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த மாலிக் உசேன், சாவன், மோதின் என்பதும், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கைதான வங்க தேசத்தைச் சேர்ந்த 6 பேரின்நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் வங்க தேசத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் ஊடுருவி திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த நான்கு நாளில் சட்ட விரோதமாகத் தங்கி இருந்த 12 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.