கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதனை சுற்றியுள்ள சிறுமுகை, காரமடை பகுதிகளில் வனத்தை ஒட்டியுள்ள இடங்களில் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தி காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடும் போக்கு அதிகரித்து வருகிறது. வெடி மருந்துடன் இரும்பு துகள்கள், சிறு கற்கள் போன்றவற்றை சேர்த்து கட்டி இதனை சற்று அழுத்தினாலும் வெடித்து சிதறும் வகையில் தயாரிக்கப்படும் இந்த ஆபத்தான வெடி மீது கோழி கொழுப்பை தடவி காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் நடமாடும் பகுதியில் வைத்து விட்டு சென்று விடுகின்றனர் வேட்டை கும்பல்.இதனை கடித்து தலை சிதறி இறக்கும் விலங்குகளை இறைச்சிக்காக எடுத்து சென்று விடுகின்றனர்.