சென்னை மருத்துவமனையை சேர்ந்த சில குழந்தைகள் ஆந்திராவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், ஆந்திர மாநிலம் புத்தூரில் அவர்கள் ஆய்வு செய்திருந்தனர். அப்போது, நவநீதம் என்ற பெண்ணொருவர் சென்னையில் இருந்து ஒரு ஆண் குழந்தையை 3 லட்ச ரூபாய்க்கு வாங்கி வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து குழந்தைகள் நல அதிகாரி லலிதா, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் ஆந்திராவில் விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்ட காவல்துறையினர் சென்னையில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்த்தனர்.