வழிப்பறியில் ஈடுபட்டவரை சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்த காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்துச் சென்றனர். அதனை பார்த்த மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்ட்லின் ரமேஷ், கொள்ளையர்களை தனிநபராக தனது இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று மடக்கினார்.
அப்போது ஒருவன் தப்பினான். மற்றொரு கொள்ளையனும் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றபோது, கொள்ளையனின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளிய உதவி ஆய்வாளர் ரமேஷ். துணிச்சலுடன் செயல்பட்டு கொள்ளையனை பிடித்தார்.
உதவி ஆய்வாளரை, உண்மையான கதாநாயகன் எனக்கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது சினிமா படத்தில் வரும் காட்சி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். செல்போன் பறிப்பு சம்பவத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/qMXh_fEZWqI" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>