இவ்ளோ பெரிய வீட்டில் பணம் இல்லையா? - ஓபிஎஸ் வீட்டு டிவியை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்!

இவ்ளோ பெரிய வீட்டில் பணம் இல்லையா? - ஓபிஎஸ் வீட்டு டிவியை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்!
இவ்ளோ பெரிய வீட்டில் பணம் இல்லையா? - ஓபிஎஸ் வீட்டு டிவியை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்!
Published on

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பண்ணை வீட்டின் கதவை உடைத்து அங்குள்ள பீரோவை உடைத்த பொழுது அதற்குள் பணம் பொருள் எதுவும் இல்லாத நிலையில் கொள்ளையர்கள் 54 இன்ச் டிவியை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவருமான் ஓ. பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்தப் பண்ணை வீட்டில் கீழ்தளத்தில் பார்வையாளர்களை சந்திப்பதற்கு ஒரு அறையும் ஓபிஎஸ் முக்கிய நபர்களை சந்திப்பதற்கு ஒரு அறையும் என இரண்டு அறைகள் உள்ளது. மேலும் அந்த வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வு எடுப்பதற்கான அறை என தனியாக ஒன்றும் உள்ளது.


இந்நிலையில் நேற்று இரவு ஓபிஎஸ்-இன் பண்ணை வீட்டில் பின்புறம் உள்ள சுவரின் வழியாக ஏறி குதித்த கொள்ளையர்கள் ஓபிஎஸ் ஓய்வு எடுக்கும் மேல் மாடியில் உள்ள அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அந்த அறையில் இருந்த பீரோவை உடைத்த நிலையில் பீரோவில் பணம் மற்றும் எந்த பொருளும் இல்லாத நிலையில் அந்த அறையில் இருந்த 54 இன்ச் டிவியை மட்டும் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இன்று காலையில் வழக்கம்போல பண்ணை வீட்டின் பாதுகாவலர்கள் வீட்டிற்குள் சென்றபோது மேல் மாடியில் ஓபிஎஸ் ஓய்வு எடுக்கும் அறையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்ததுள்ளது. உடனடியாக அவர்கள் பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்களைக் கொண்டு சம்பவ இடத்தை ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஓபிஎஸ் இன் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டின் கதவை உடைத்து 54 இன்ச் டிவியை கொள்ளையர்கள் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com