`என் மகளுக்கு போட்டியா படிப்பியா...’- சிறுவனை கொன்ற தாய்! தாக்கலானது குற்றப்பத்திரிக்கை!

`என் மகளுக்கு போட்டியா படிப்பியா...’- சிறுவனை கொன்ற தாய்! தாக்கலானது குற்றப்பத்திரிக்கை!

`என் மகளுக்கு போட்டியா படிப்பியா...’- சிறுவனை கொன்ற தாய்! தாக்கலானது குற்றப்பத்திரிக்கை!
Published on

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் வைத்து மாணவனை கொலை செய்த விவகாரத்தில் பெண் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

காரைக்காலில் நேரு நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டனுக்கு, சக மாணவியுடன் படிப்பில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததில் மாணவன் பாலமணிகண்டனுக்கு குடித்திருக்கிறார். இதை குடித்ததில் கடந்த செப்.3 ஆம் தேதி மாணவன் உயிரிழந்தார்.

சகாயராணி விக்டோரியா குளிர்பானம் பள்ளியில் காவலாளியிடம் கொடுத்து அனுப்புவது அங்குள்ள சி.சி.டி.வி காட்சியில் பதிவான காட்சிகள் சிக்கின. அதன் அடிப்படையில் சகாயராணி விக்டோரியாவை காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி சிறையில் கொலையாளி சகாராணி விக்டோரியா கடந்த மூன்று மாதமாக அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே காரைக்கால் மாவட்ட போலீசார் விசாரணையை துரிதப்படுத்திய காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் முக்கிய ஆதாரங்களை சேகரித்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த குற்றப்பத்திரிகையில்  முக்கியமாக சிறுவனுக்கு பள்ளியில் கொடுக்கும் காட்சிகள் மற்றும் எலி மருந்து வாங்கிய கடைகளில் கைப்பற்றிய சி.சி.டி.வி காட்சிகள், சிறுவனின் உடல் கூறாய்வு வீடியோ பதிவுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர். போலீசார் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் முக்கியமாக போலீசாருக்கு ஆதரமாக கிடைத்தவையாக இருப்பது விசாரணையில் குற்றவாளி சகாயராணி விக்டோரியாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டு சிறுவனுக்கு கொடுக்கப்பட்ட எலி பேஸ்டும், சிறுவனின் உடல் கூராய்வு அறிக்கையில் உடலில் கிடைக்கப்பட்ட விஷ மருந்தும் இரண்டும் ஒரே மருந்து என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிக்கையில் கூறியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com