பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜெயலட்சுமி தெரிவித்தார்.
பாஜக மாநில மகளிரணி துணைத் தலைவரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு அளித்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி, "என்னுடைய சினேகம் அறக்கட்டளை தொடர்பாக கடந்த மாதம் பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதோடு மட்டுமல்லாமல் என்னை பொதுவெளியில் அவதூறாக பேசியுள்ளார். அவரோட அறக்கட்டளை பெயரில் தான் பணம் வசூலிப்பதாக பொய்யாக சினேகன் பேசியுள்ளார். இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த விசாரணையில் எழும்பூர் நீதிமன்றம் பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: `என் மனைவிக்கு பாலியல் தொல்லை’ பாஜக பொதுச்செயலாளர் மீது சசிகலா புஷ்பா கணவர் பகிரங்க புகார்