இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்தாரா டாக்டர் ? காவல்துறை விசாரணை

இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்தாரா டாக்டர் ? காவல்துறை விசாரணை
இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்தாரா டாக்டர் ? காவல்துறை விசாரணை
Published on

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை செல்போனில் ஆபாச படம் எடுத்த டாக்டரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளம் பெண் ஒருவர் மயிலாப்பூரில் உள்ள தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அந்தப் பெண் மயிலாப்பூர்  நாட்டு சுப்புராயன் தெருவில் உள்ள ஆர்.எம்.கிளினிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது  டாக்டர் சிவகுருநாதன் (64) அந்தப் பெண்ணை பரிசோதணனை செய்யும்போது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் கிளினிக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்களிடம் தனக்கு நடந்ததை குறித்து தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் டாக்டரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால், டாக்டர் வீடியோவை அழித்து விட்டு மெமெரி கார்டை வெளியே தூக்கி வீசியதாக தெரிகிறது. 

இதன் பிறகு மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் டாக்டர் சிவகுருநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் இருந்த 2 செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com