மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கைதி தப்பி ஓடிய நிகழ்வு மதுரையில் அரங்கேறி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சேர்ந்த பத்மேஸ்வரன் கடந்த மார்ச் மாதம் கடற்கரை சாலையில் காதலனுடன் வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை கைதியாக அவர் இருந்து வந்தார்.
இந்நிலையில், இவரது 2 கால்கள் அடிபட்டு முறிவு ஏற்பட்டதை அடுத்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவரை சிகிச்சைக்காக மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது குற்றவாளி பத்மேஸ்வரனிற்கு எலும்பு மூட்டு பிரிவில் சிகிச்சை அளிக்க மதுரை மாநகர ஆயுதப்படை காவல்துறையினர் அழைத்து வந்த போது பத்மேஸ்வரன் காவல்துறையினரை ஏமாற்றி தப்பி உள்ளார்.
அவர் மீது 11 வழக்குகள் இருப்பதும் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.